மருது பாண்டிய சகோதரர்களின் தியாகத்தை போற்ற வேண்டும் - மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மருது பாண்டிய சகோதரர்களின் தியாகத்தை இன்றைய இளைஞர்கள் போற்ற வேண்டும் என மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


மாமன்னர்களாக விளங்கிய மருது பாண்டிய சகோதரர்களின் 224வது குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மதுரை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் அவர்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர் என்றும், இன்றைய தலைமுறை இளைஞர்கள் அவரை மறக்க கூடாது என தெரிவித்தார்.

Night
Day