இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி பகுதியில் அடகு கடை நடத்தி வந்த  தன்ராஜ் சௌத்ரி என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல்  அவரின் மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு பன்னிரெண்டரை கிலோ தங்கம் மற்றும் ஆறரை லட்சம் பணத்தை  கொள்ளையடித்து சென்றது. தகவல் அறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 4 பேர் பிடிப்பட்ட நிலையில் இருவர் தப்பித்து ஓட முயன்றனர். இதில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒருவர் தப்பித்து தலைமறைவனார். தலைமறைவாக இருந்த ரமேஷ் பட்டேல் ஜெய்ப்பூர் பகுதியில் பதுங்கியிருப்கதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்தனர்.  

Night
Day