மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் சீண்டல் - வன காவலர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வன காவலரை போலீசார் கைது செய்தனர்.


மாஞ்சோலையில் வன பாதுகாவலராக பணியாற்றும் அய்யா குட்டி என்பவர் அங்குள்ள பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து மதுபோதையில் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அய்யாகுட்டியை கைது செய்தனர். மாஞ்சோலை பகுதியில் மதுபோதையில் வன பாதுகாவலர் ஒருவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day