"காதலித்து கரம்பிடித்த மனைவி" - உருட்டுக்கட்டையால் அடித்தே கொலை செய்த கொடூர கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரக் கணவனின் பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

விகாரபாத் சாயாபூர் கிராமத்தை சேர்ந்த பரமேஷ் அதே பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்து வந்த நிலையில், அனுஷா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பரமேசும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அனுஷாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த பரமேஷ், அனுஷாவை கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அனுஷாவை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கொடூர கணவன் பரமேஷை போலீசார் கைது செய்தனர்.  

Night
Day