சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு - 6 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தெலங்கானா மாநில தொழிலதிபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானாவை சேர்ந்த ரவீந்திர கவுடா என்பவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த நிலையில், 2 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சென்னை வளசரவாக்கத்திற்கு குடிபெயர்ந்த தொழிலதிபரை நோட்டமிட்ட கூலிபடையினர் அவரை கடத்தி சென்றுள்ளனர். இதுதொடர்பாக தொழிலதிபரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் அருகே தொழிலதிபரை மீட்டனர். இந்நிலையில் தொழிலதிபரை கடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளனர். 

Night
Day