காஷ்மீராக மாறிய கொடைக்கானல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் குறைந்தபட்சமாக 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தலைக்குந்தா, குதிரை பந்தய மைதானம், தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உறைப்பனி காணப்படுகிறது. உறை பனியால் தலைக்குந்தா பகுதி மினி காஷ்மீர் போல் காணப்படுவதால் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உறை பனியை கைகளால் எடுத்து விளையாடி மகிழ்ந்ததோடு புல் மைதானங்களில் இருந்த உறை பனியை கண்டு ரசித்தனர். உறைப்பனி தாக்கம் காரணமாக உதகை நகரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.3 டிகிரி செல்சியஸூம், தலைக்குந்தா, அவலாஞ்சி, காந்தள் பகுதிகளில் தொடர்ந்து 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கொடைக்கானலில் உறை பனி காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறை பனி காணப்படுவது வழக்கம். ஆனால், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி, ஜிம் காண மைதானம் பகுதிகளில் உறை பணியானது புல்வெளிகள் மீது முத்துக்கள் போல் படர்ந்து காஷ்மீர் போன்று காட்சியளிக்கிறது. எப்போது பரபரப்பாக காணப்படும் நட்சத்திர ஏரி தற்போது கடும் குளிர் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காணப்படும் கடும் பனிபொழிவால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம், மிளகாய், அவரை, மற்றும் சம்பா நெல்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தாராபுரம் புறவழிச்சாலை, அமராவதி ரவுண்டானா, ஐடிஐ கார்னர், பொள்ளாச்சி சாலை, உடுமலை சாலை, கரூர் சாலை, மூலனூர், குண்டடம், கோவிந்தாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

varient
Night
Day