கோவை - ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கொட்டும் பனியில் விடிய விடிய அமர்ந்திருந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தேர்தல் காலத்தில் திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைந்து நீண்ட காலம் ஆகியும் செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய செவிலியர்களை கைது செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Night
Day