எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெண் ஒருவர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சரண் - முத்துலட்சுமி தம்பதி. திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், பிரச்சினை காரணமாக, கணவரை பிரிந்து, அதேபகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்த முத்துலட்சுமி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குளம் போலீசார் முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு முத்துலட்சுமி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்துள்ளது. அதில், முத்துலட்சுமிக்கும், பாவூர்சத்திரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் தனிமையில் இருந்ததை சக்திவேல் வீடியோவாக பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டி வந்ததால், ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதற்கு காரணமான 5 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அதில் 5 கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.