ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர், தனது தாயாருடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு தனியாா் ஆம்னி பேருந்தில் சென்றுள்ளார்.




அப்போது பேருந்தை ஓட்டிச் சென்ற குளப்புறம் பகுதியை சோ்ந்த அனீஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரிடமும் நன்றாக பழிகிய அனிஷ், கல்லூரி மாணவி ஊருக்கு வரும் போதெல்லாம் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார்.



இந்நிலையில் கடந்த வாரம் அனீஷ் ஓட்டிச் சென்ற பேருந்தில் மாணவி சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை மிரட்டிய அனிஷ் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட  புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனீஷை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.



பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விளம்பர திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

Night
Day