எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் பதுங்கி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் என்கவுன்டரில் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சன் பதக் தலைமையிலான கும்பல், டெல்லியில் உள்ள பகதூர் ஷா மார்க்கில் பதுங்கி இருந்தது. அங்கிருந்து பீகார் சட்டமன்றத் தேர்தலில் குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக உளவுத் துறை தகவல் அளித்தது. அதன்பேரில் பீகார் மாநில போலீசாரும் டெல்லி குற்றப் பிரிவு போலீசார் இணைந்து இன்று அதிகாலை ரவுடி கும்பல் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் பதக், அமன் தாக்கூர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவர் மீது பீகார் மாநிலத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு அம்மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.