எழுத்தின் அளவு: அ+ அ- அ
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் 74 வயதான நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பம் நிலவி வந்த நிலையில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. இதனையடுத்து இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் 35 வயதான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி தற்போது எதிர்கட்சித் தலைவராக உள்ளார். நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, துணை முதல்வராகவும் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டு முதல் எம் எல் ஏவாகவுள்ளார்.