திருவாரூரில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் அருகே தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலநாலாநல்லூர், சவளக்காரன், கீழநாலாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மழைநீரில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை மூதாட்டி ஒருவர் குடும்பத்தினருடன் கையில் வைத்து கொண்டு அரசிடம் நிவாரணம் வழங்க வேண்டி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். 

Night
Day