ராமநாதபுரத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்... கண்ணீரில் விவசாயிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்த நிலையில், தற்போது மழைவிட்டும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் மூழ்கி உள்ளது.

சூரங்கோட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் குளம்போல் நீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மழை நீரில் விளை நிலங்கள் மூழ்கிக் கிடக்கும் பருந்துப் பார்வை காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

Night
Day