நகைச்சுவை நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி காலமனார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நகைச்சுவை நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று காலமனார். அவருக்கு வயது 70. 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, உலக சாதனை புரிந்த மனோரமாவின் மகன் பூபதி இன்று காலை 10 மணியளவில் காலமானார். இவர், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
 
பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  காலமான பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதி சடங்கு நாளை மதியம் 3 மணிக்கு கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Night
Day