ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் சுந்தர்.சி அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கமல்ஹாசனின் ராஜ்கமல்  நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. தலைவர் 173 என  பெயரிடப்பட்ட இந்த படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தலைவர் 173  படத்தில் இருந்து  விலகுவதாக சுந்தர் சி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், Thalaivar173 படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை, தான் கனத்த இதயத்துடன் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தால், தயவுசெய்து தனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்களிடம் சுந்தர்.சி கேட்டுக் கொண்டுள்ளார். 

Night
Day