ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே  திரை பிரபலங்கள் பலரது வீடுகளுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினியின் வீட்டை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கரின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வரும் நிலையில், மிரட்டல் விடுக்கும் நபர் யார் என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Night
Day