நாகூர் ஆண்டவர் தர்காவின் சந்தனக்கூடு விழா - ஆட்டோவில் வந்திறங்கிய இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469வது கந்தூரி விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். 

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் பாரம்பரிய முறைப்படி இன்று அதிகாலை நடந்தது. 20-க்கும் மேற்பட்ட அலங்கார ரதங்கள் அபிராமி அம்மன் திடல் அருகே ஒருங்கிணைக்கப்பட்டு, ஊர்வலமாக தர்காவை வந்தடைந்தது. பின்னர் பாதுஷா சாகிபு ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபில் சந்தனம் பூசும் சடங்கு நடைபெற்றது. இதனைக் காண்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆடம்பரமின்றி ஆட்டோவில் வந்திறங்கினார். வெள்ளை குர்தா அணிந்து மக்கள் நடுவில் கலந்து, சந்தனம் பூசும் நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.  

Night
Day