இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. 

சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து ஏராளமான தமிழ் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். தேவாவின் பல பாடல்களுக்கு இசை உதவி செய்ததோடு பல பாடல்களையும் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சங்கத் தலைவராக சபேஷ் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபேஷ் காலமானார். அவரின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் இறுதி சடங்கு நடைபெற்று, சபேஷ் உடல் பிருந்தாவனம் நகர் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day