தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வந்த நீர் நாயினை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். சாத்தனூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்தோடி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் எல்லீஸ் அணைக்கட்டு அருகே தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் நீர் நாய் அடித்து வரப்பட்டது. நீரில் நீந்தியபடியே வந்த நீர் நாய் மீன்களை பிடித்து சாப்பிட்டபடியே உற்சாகமாக நீத்தி விளையாடியது. அழையா விருந்தாளியாக வந்த நீர்நாயை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். 

Night
Day