எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளாடிமிர் புதினுடனான சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்துள்ள நிலையில் மிகப் பெரிய அளவில் அணு ஆயுத சோதனையை ரஷ்யா மேற்கொண்டது.
3 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டாத நிலையில் ஹங்கேரியில் நடக்கவிருந்த டிரம்ப்- புதின் சந்திப்பை அமெரிக்கா ஒத்தி வைத்தது.
இந்நிலையில் ரஷ்யா தனது அணு ஆயுதப் படைகளின் ஒத்திகையை நடத்தியது. இதில் நிலம், நீர், மற்றும் வானில் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவையும் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ஒத்திகையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் பார்வையிட்டார்.