நாடு கடத்தப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, வைர வியாபாரி மெஹுல் சோக்சி தாக்கல் செய்த மனுவை, பெல்ஜியம் நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அறை தயார்படுத்தப்பட்டுள்ளது.

மெஹுல் சோக்சி, தனது உறவினர் நிரவ் மோடி இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வாங்கிய 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்ற போது அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

Night
Day