வணிக மையத்தில் பயங்கர விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வணிக மையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் உள்ள பல அடுக்குகள் கொண்ட ஜே.எம்.எஸ் வணிக மையத்தில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த தளங்களில் இருந்தவர்கள் கட்டிடத்தின் உச்சியில் தஞ்சமடைந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Night
Day