இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளான இந்தோனேஷியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேஷியாவின் 300 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் மாகாணம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மேலும், சுமத்ரா தீவை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று 6 புள்ளி 4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதன்காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்தனர். மேலும், 59 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி பாலம், வீடுகள் இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுவரை 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதாக இந்தோனேஷியா அரசு கூறியுள்ளது.

சாலைகளில் பல அடி உயரத்திற்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கார்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுகிறது.

சுமத்ரா மட்டுமின்றி மலாக்கா ஜலசந்தியும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளம் பெருக்கெடுத்த பகுதிகளில் மீட்புக்குழுவினரும், ராணுவத்தினரும் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Night
Day