திருச்செந்தூரில் மழை நீரில் மூழ்கிய வாழை தார்கள் - படகில் மீட்ட விவசாயிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் அருகே மழை நீரில் மூழ்கிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளை படகில் சென்று விவசாயிகள் மீட்டனர். 

கடந்த சில தினங்களாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள தென்கால்வாயில் இருந்து பாசனத்திற்காக குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதியில் வாழைத் தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து நீரில் மூழ்கிய வாழை தார்கைளை படகு மூலம் மீட்டு, அறுவடை செய்வதற்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Night
Day