'டிட்வா' கோர தாண்டவம் - 56 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிட்வா புயலால் இலங்கையில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிய டிட்வா புயலால் இலங்கை முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கொழும்பு, காலி, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட 17 மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தொடர் மழையால் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். கனமழை மற்றும் வெள்ளம் என இயற்கை பேரிடர்களால் இலங்கை முழுவதும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமாகிய 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராவணா நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகளவு பெருக்கெடுத்துள்ளது.

பெருக்கெடுத்த வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் யானை மீது அமர்ந்த சிறுத்தையின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீட்பு பணிகளை தீவிரப்படுத்த இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளதால் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Night
Day