திருவாரூர், மயிலாடுதுறை - பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் மழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளநிலையில், புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தொடர் கனமழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் சிம் ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். 

இந்தநிலையில், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று, புதுக்கோட்டையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அரைநாள் விடுப்பு அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழையால் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சிம் ரன்ஜித் சிங் காலோன் உத்தரவிட்டார். ஆனால், ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், மாணவர்கள் மழையில் குடைப்பிடித்தப்படி பள்ளி,கல்லூரிகளுக்கு சென்றனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை செய்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதன்காரணமாக குடை பிடித்தபடி ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றனர். 
.

Night
Day