திமுக நிர்வாகிக்கு கடுங்காவல் தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு மூன்று பிரிவில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ராமாபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழா கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் மது போதையில் திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, பெண் காவலர் அளித்த புகாரின் பெயரில் கண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அமுதா, குற்றவாளிக்கு மூன்று பிரிவில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 

Night
Day