கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை - மூவருக்கு 1 நாள் போலீஸ் காவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க கோவை மகிளா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2ம் தேதி 21 வயது கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிங்கம்புணரியைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி, அவருடைய தம்பி கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த குணா ஆகிய மூவரையும் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். 

இதனை அடுத்து மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு போலீசார் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த  நீதிபதி ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். 

Night
Day