கடிதம் எழுதி வைத்து விட்டு துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்ற சிறப்பு படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,  

Night
Day