ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 32 மாடி குடியிருப்பின் வெளிப்புற மூங்கில் சாரக்கட்டு பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில், அங்குள்ள 8 அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏழு உயரமான கட்டிடங்கள் தீக்கிரையாகின. சுமார் 2 ஆயிரம் வீடுகளைக் கொண்ட இந்த பகுதியில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் இன்னும் அணைத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது என்றும் 279 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 900த்துக்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Night
Day