செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏரிக்கு நீர்வரத்து தொடர்வதால் ஏரியின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 22 அடியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீரின் அளவை பொறுத்து உபரி நீர் திறப்பது மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day