தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி வலுவிழந்துள்ளநிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கடும் என்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

Night
Day