ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர் கல்லால் தாக்கி கொலை - 2 மகன்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த ஆவடி அருகே ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று முன் தினம் அதிகாலை சவாரி முடித்து ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் முத்து, அருகே சாலையோரத்தில் போதையில் படுத்திருந்த ஸ்ரீநிவாசன் என்பவரை தாக்கி விரட்டியுள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த அவரது மகன்கள் ஜெபராஜ் மற்றும் அருள் ஆகிய இருவரும் ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்த முத்துவை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கொலையாளிகள் இருவரை கைது செய்தனர்.

Night
Day