ராமேஸ்வரத்தில் கடும் கடல் சீற்றம் - நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கும் விசைப்படகுகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் நங்கூரம் அறுந்து விசைப்படகுகள் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள டிட்வா புயலின் காரணமாக ராமேஸ்வரம் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியதையடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடல் சீற்றம் காரணமாக நங்கூரங்கள் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. சேதமடைந்து கரை ஒதுங்கிய படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவது தொடர் கதையாகி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day