டெல்டா விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் கடலோர மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளனர். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு 30 பேர் கொண்ட 6 குழுவினர் 4 மோப்ப நாய்களுடன் விரைந்தனர். இதே போல், புதுச்சேரிக்கு 2 குழுவினர் விரைந்தனர்.  

Night
Day