கருத்த மச்சான் பாடலை நீக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

Dude திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Dude திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள தனது பாடல்களை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என பட நிறுவனத்தின் சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இளையராஜாவின் பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே டியூட் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட பாடலை நீக்கி இளையாராஜாவின் மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Night
Day