சென்னைக்கு 520 கி.மீ தொலைவில் டிட்வா புயல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டல் டிட்வா புயலாக வலுவடைந்துள்ளது. தற்போது இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. டிட்வோ புயலின் நகரும் வேகம் குறைந்து மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

‘டிட்வா' புயலானது அடுத்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக் கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day