திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூழ்ந்த மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூரில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் சுப்பிரமணி சுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். விடிய விடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழைநீர் சூழ்ந்து, பிரகாரத்தில் தேங்கியுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் கோயில் கடற்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் கடல் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day