நீர் வரத்து அதிகரிப்பு - அருவியில் குளிக்கத் தடை...

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில்  தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்கு வனத் துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மற்ற அருவிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடை விதிப்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day