எழுத்தின் அளவு: அ+ அ- அ
சபாநாயகர் அப்பாவுவைக் கண்டித்து அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்தனர்.
ஜி.கே மணியை பாமக சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும், சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருளை பாமகவில் இருந்து நீக்கி விட்டதால் அவரை பாமக உறுப்பினராக ஆவணங்களில் பதிவு செய்யக் கூடாது, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை சட்டமன்ற குழு தலைவராக அங்கீகரித்து முதல் வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று அன்புமணி தரப்பில் சபாநாயகரிடம் ஏற்கனவே கடிதம் அளிக்கப்பட்டது. கடிதம் தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சட்டப்பேரவை கூட்டத்தின் 3வது நாளான இன்று அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்தனர். பேரவையில், ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ அருள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்ததை கண்டித்து அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ வெங்கடேசன், சபாயநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.