வாக்குறுதியில் கூறியதை இனியாவது திமுக அரசு செய்யுமா - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவற்றை இனியாவது திமுக அரசு நிறைவேற்றுமா என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள், தூய்மை பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலரும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை செய்தீர்களா என  கேள்வி எழுப்புவதாக கூறினார். அதனால் மீதமுள்ள ஆட்சி காலத்திலாவது வாக்குறுதியில் கூறியவற்றை செய்ய வேண்டும் என  வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.  

Night
Day