குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கடந்த 23-ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் இத்திருவிழா, இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி உடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், காளி, சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மகிசா சூரசம்ஹாரம் இன்று குலசேகரபட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அடிப்படை வசதிகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பிற்காக 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Night
Day