எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் மாட வீதிகள் வழியாக வராக சுவாமி கோவில் முகமண்டபம் அடைந்தனர். அங்கு உற்சவங்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டன. அதன் பின் காலை 6 மணி அளவில் சக்கரத்தாழ்வாரை கோயில் திருக்குளத்திற்கு கொண்டு சென்ற அர்ச்சகர்கள் மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் திருக்குளத்தில் புனித நீராடினார்கள்.