திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.5.28 கோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாதத்தில் 5 கோடியே 28 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

நவராத்திரி விழா மற்றும் பள்ளி தொடர் விடுமுறையையொட்டி செப்டம்பர் மாதத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகஅளவில் வருகை தந்தனர். இதனையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கடந்த 35 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய வகையில் 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 1 கிலோ 905 கிராம் தங்கமும், 72 கிலோ 250 கிராம் வெள்ளியும், 922 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day