நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் தீப கொப்பறை சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து காலையில் விநாயகர் சந்திரசேகர், மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருக்கோவிலில் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.



தீபத் திருவிழாவின் 10வது நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும், தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.




அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் ஐந்தே முக்கால் அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த மகாதீப கொப்பறை பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு சென்ற பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தூக்கி சென்றனர்.



Night
Day