கார்த்திகை தீப 3 ஆம் நாள் உற்சவம் - சிம்ம வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை தீப திருவிழாவின் 3வது நாள் இரவு உற்சவத்தில் சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தீப திருவிழாவின் 3ம் நாள் இரவு உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். கோயிலின் தேரடி வீதி, திருஉடல் வீதி, கோபுர வீதி, பெரிய தெரு வீதி ஆகிய நான்கு மாட வீதிகளில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

Night
Day