மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் சென்று அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டு அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி மாதம் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் 63 கோடி ரூபாய் நிவாரணம் ஓதுக்கீடு செய்ததாக விளம்பர திமுக அமைச்சர் அறிவித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த பணம் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர். 

Night
Day