குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

‎‎சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

‎தாம்பரம்- வேளச்சேரி சாலையில் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், வேலூர் மறை மாவட்ட ஆயர் அம்புரோஸ் மற்றும் குருக்கள், கன்னியர்கள், அருட் சகோதரர், சகோதரிகள் கலந்து கொண்டனர். 

கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆலய பணிகள் நடைபெற்று வந்தநிலையில், ஆலய திறப்பு விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தில் குழந்தை இயேசுவின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக புகைப்படங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. திறப்பு விழாவை முன்னிட்டு, தேவாலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகள் பார்வையாளர்களைக் கவர்ந்தது. 

சிறுவர்களின் அணிவகுப்பு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆலய திறப்பின் போது பலூன்கள் மற்றும் புறாக்கள் பறக்கவிடப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ஆலய திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Night
Day