சபரிமலை கோயில் நடை திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். அதன்படி, பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை 65 நாட்கள் நடக்கும் இந்த மண்டல, மகர விளக்கு சீசன் நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், மகரவிளக்கு யாத்திரைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் புனித நதியான பம்பையில் நீராடி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டும், மாநில அரசும் இணைந்து இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து வருகின்றன. மேலும், பம்பை மற்றும் மலையேற்றப் பாதைகளில் யாத்திரையை சுமூகமாக மேற்கொள்ள தேவையான வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

Night
Day