சவுதி அரேபியாவில் 42 இந்தியர்கள் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

சவூதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட போது, பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மெக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் செய்த யாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. மதீனா அருகே சென்ற போது டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பேருந்துக்குள் இருந்த 42 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த 42 பேரும் இந்தியர்கள் எனவும் அதில் பலரும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சவூதி தூதரகத்தை தொடர்பு கொண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரிக்க தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

Night
Day